Thursday, April 4, 2013
உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு - பிஜிராமன்
வியாபாரி கையில் விவசாயி என்னை
வியாபாரம் செய்யும் வியாக்கியானம் என்ன
அயலான் எமையே அடிமையாக்கி மீண்டும்
சுயமாக வாழ்வை சுதந்திரமாய் வாழும்
வழியை அடைத்து விலகாது நின்றால்
அழியும் உழவும் அதனோடு தாமும்
பலியாகி மக்கள் பசியாற உண்ணும்
நிலைகெட்டு போகும் நசிந்து
விளைநிலம் எல்லாம் விரதம் இருக்க
களைமட்டும் ஆங்காங்கே காட்சிக் கிருக்க
கடனோ தலைமேல் கனமாய் இருக்க
திடமாய் தினமும் திறனாய் உழைத்த
உழவன் எனக்கே உயிருக் உயிராய்
உழவே உளது உணர்வாய் மனிதா
பிழையை திருத்தி பணியை முடித்தால்
தழைக்கும் புதுபயிர் பார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment