Wednesday, April 3, 2013
போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - ரமேஷ்நாகா
முகங்களை மாற்றிக் கொண்டுவிட்ட இந்த அரசாங்கங்கள்...
வணிக நிறுவனங்களாகி...எழுதப்படாத பெயர்ப்பலகையுடன்
அலையத் துவங்கிவிட்டன...நம் வீதியெங்கும்.
அவைகளின் அனுமதிக்கப்பட்ட எல்லைகளில்....
“வரி”களால் வாழ்ந்து கொண்டிருந்தவை..
“போதை”யேற்றிக் கொள்ளக் கற்றுக்கொண்டுவிட்டன...
எப்போதும் அடிமையாய் இருக்கும் அதன் “குடி”மகன்களால்.
“வீட்டைக் கெடுக்கும்” விளம்பர “போதை” பானங்கள்...
நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாய்...
அரசின் வரவு-செலவுகள் சொல்ல...கொஞ்சம்..கொஞ்சமாய்...
நாட்டின் எல்லா வீடுகளும் கெட்டுக் கொண்டிருந்தன.
“போதை”யின் சராசரி வயது...வறுமைக் கோட்டிற்குக் கீழ் விழுந்து...
வெறும்...பதின்மூன்றாகிவிட...கிளையாய் முளைத்துவிட்ட..
“இலவசங்கள்...சினிமாக்கள்...அரசியல்...நுகர் விளம்பரங்கள்...”என
இடைவிடாத போதைகளுடன்...எம் வீதியெங்கும் அலைகின்றன..
அழுகித் திரியும்...”போதை” நாற்றுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment