நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் - கிரிகாசன்
பாலூட்டி வளர்பாலன் படையில் புறமுதுகெனிலோ
பார்தனமும் வெட்டிவீசி
தாலாட்டிப் பாடியுமென் தாய்மடியிற் கொண்ட செயல்
தவறென்றே ஆவிவிடுவேன்
வேல்காட்டி வளர்சங்க வீரமகள் வழிவந்த
வேல்விழிகள் கொண்ட மாதர்
பால்வேட்டை யாடுங்கொடு பன்றிகளின் தீனியெனப்
பலியாகும் தீமை காணாய்
தேர்பூட்டித் திங்கள் ஒளித் தங்கமதில் முடிசூடி
தாயே என் தமிழே என்று
ஊர்கூட்டி மணிச்சரங்கள் உற்சாக சங்கீதம்
உண்டு கலை நடமுமாடி
நேர்கூட்டி குறுந்தகையும் அகமோடு புறம்போற்றி
ஔவையின் நல்லதமிழும்
பார் காணச் செம்மைமொழி பட்டமுடன் பொன்னகையும்
பரிசு தரக் கண்டுநாணி
கூர் ஊசி கொண்டுடலில் குறுகுறென தீண்டல்போல்
கூசிமனம் நாணுகின்றாள்
பேர்பேச வீரமுடம் பெருந்திரளென் ரெழுமனிதம்
போன இடம் எங்கேயப்பா
-அன்புடன் கிரிகாசன்
No comments:
Post a Comment