காதலாகி
நட்பெனும் தோட்டத்தில்
இருவரும் ஒன்றாக தான் மலர்ந்தோம்…
பூத்த பூக்களெல்லாம்
வெறும் பூக்களாகவேவா இருக்கின்றன?
நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?
நட்பில் சிறு மாற்றம்…
காதலாகி,
காதலெனும் சாவினிலே
ஒன்றாகவே மூழ்கியிருந்தோம்.
அப்போது தெரியவில்லை
அது
‘சாவு’ என்று…
சாதி நாகம் எங்களை தீண்டவில்லை…
எப்படி அது நடந்ததென்று தெரியவில்லை
நான் குடிகொண்ட அவன் இதயத்தில்
இன்று வேறொருத்தி…
நீண்ட தூரம் சென்றுவிட்டான்
என்னை விட்டு…
ஆனாலும் காதலிக்கிறேன்
இன்று
விட்டுப் போனவனை
அல்ல
அன்று
என்னை காதலித்தவனை…
பேபிநடராஜன்
No comments:
Post a Comment