Wednesday, April 3, 2013

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு - மீணவன் நியூ



சொத்து இல்லாத கூலிக்காரன்
வித்து வாங்க காசு இல்லாமல் தன் தாலியை
 வித்துவாங்கி .வித்து  விதைத்து .புதைத்து
சொத்துதான்  தன் உழைப்பு என்று
சத்து எல்லாம் மொத்தமாக
நித்தம் நித்தம் - உழைத்து உழைத்து
மெத்தை இன்றி உறங்கிக்கொண்டு
சித்தம் கொண்டு கணவு காண்கிறான்
உழுது விதைத்து -மழையின்றி
அழுது புலம்பி -ஏற்றம்காண
ஏற்றம் இறைத்து -இளைத்து  மழை காற்றில் கடல்
சீற்றம் கண்டு வியர்வை
நாற்றம் கொண்ட உடலோடு
நாற்றை பிடுங்கி -கற்றை கட்டி
வயிற்றை கட்டி சேற்றை உழுது
பயிற்றை விளைத்து -விளைந்ததை
கயிற்றை கட்டி
குளத்தின் அருகில்
களத்தில் சேர்த்து
காற்றில் தூற்றி ஏற்றி வந்து
விற்பனை கூடத்தில்
அற்ப விலைக்கு போகுது
விதைத்த  முதல் கோணியில் தைத்த வரை
உழுதவன் கணக்கு பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சவே இல்லை

                                                                     இப்படிக்கு
                                                              மீணவன் நியூ

No comments:

Post a Comment