Wednesday, April 3, 2013

போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - பொன். செல்லமுத்து




போதைச் . . . . . .சேற்றில் . . . .மானிட . . . . . . .நாற்றிட்டால்
பலன்பெறும் . . . காலத்தில் . . .வெள்ளாமை . . . என்னகிட்டும்?
இளமையில் . . . இயலாமை . .இனியஉயிர் . . . . நிலையாமை
இல்லாள்துயர் . . தாளாமை . . .இவைமட்டுமா . . வெள்ளாமை?

மனையாளின் . . . . மாட்டலும் . . . . மழலைபள்ளி . . கட்டணமும்
மதுக்கடை . . . . . . கல்லாவில் . . . .மானிடனோ . . . போதையில்
போதைகொண்ட . . பயனாளி . . . . . .ஆகின்றான் . . . நோயாளி
பேதையாம் . . . . . அவன்மனைவி . . ஆகின்றாள் . . . கடனாளி

துள்ளாட்ட . . . இளைஞனவன் . . தள்ளாடும் . . . .வலிவின்மை
இல்லாளும் . . இளசுகளும் . . . . .படுகின்ற . . . . .வன்கொடுமை
சமுதாயம் . . . தருகின்ற . . . . . .வெகுமானம் . . அவனுக்கு
இழுக்காக . . . .விளித்திடுமே . . . குடிகாரன் . . . .எனஅழைத்து

உண்டியது . . . வெந்து . . . . . . உள்புண் . . . . . உருவானால்
பெண்டாட்டி . . பிள்ளைகள் . . . .திண்டாட . . . . வேண்டியதுதான்
சிறுநீர் . . . . . .உறுப்பது . . . . . .செயலிழந்து . . விட்டாலே
சிறுகுழாய் . . .பொறுத்திதான் . . சிறுநீர் . . . . . . விடமுடியும்

கல்லீரலும் . . . கணையமும் . . . . .கொண்டமது . . தாக்கத்தினால்
செல்லறித்த . . .ஏடுகளாய் . . . . . . .சீர்கெட்டு . . . . போகாதோ?
நல்லவன் . . . . என்றவனை . . . . . .நாலுபேர் . . . . போற்றுகையில்
புல்லரிக்கும் . . போதையொன்றே . . போதாதோ . . .அவனுக்கு?! 

No comments:

Post a Comment