Wednesday, April 3, 2013

அமிலத்தில் ஆடிய அனிச்சம் - பொன். செல்லமுத்து



அன்னத்தின் . . . . தூவியும் . . . . . அனிச்சத்தின் . . மலரும்
பெண்ணுடலை . . வருத்தும் . . . . .நெருஞ்சி . . . . . முள்ளென்று
பெண்ணின் . . . . .மென்மையை . . உயர்வு . . . . . . நவிற்சியில்
பொய்யா . . . . . . மொழியினில் . . புகன்றானே . . . வள்ளுவனும்

அன்னத்தூவி . . இன்னலையே . . அவள்மேனி . . . தாங்காதே
அக்கினி . . . . . .திராவகத்தை . . . பொன்மேனி . . .தாங்குமோ?
அனிச்சமே . . . . வருத்தும் . . . . . அவள்மென் . . .தேகமது
அமிலத்தின் . . . வீச்சினை . . . . . அய்யகோ . . . . தாங்குமோ?

சூளையில் . . . வெந்திட்ட . . . சுண்ணாம்பாய் . . ஆனதோ?
வள்ளுவன் . . . உருவகித்த . . வித்யாவின் . . . . மென்னுடல் – ஆம்
பொன்னை . . . உருக்கி . . . . . நகையாக்கும் . . . அமிலம்
பெண்ணை . . . கருக்கி . . . . . சிதைத்த . . . . . . அவலம்

மாலையிட . . . மாட்டாயோ . . . . .பேதையென்ற . .சந்தேகம்
காளையவன் . . கொண்டசெயல் . . சிதைத்ததோ . . .உன்தேகம்?
அவசர . . . . . . மணத்திற்கு . . . . .அரும்பேநீ . . . . மறுத்ததால்
சவமாய் . . . . . ஆகியெம் . . . . . . மனதில்சாமி . . ஆனாயோ?

இத்தரையில் . . . வாழ்க்கையினி . . இல்லையென . . உணர்ந்தநீ
நேத்திரம் . . . . . .கொடையீந்த . . . .நின்செயலுக் . . . .கீடுண்டோ?
விண்ணுலகு . . . சென்று . . . . . . . வினோதினி . . . . துணையானாய்
மண்ணுலகில் . . எம்நெஞ்சில் . . . . தெய்வத்துக் . . . . கிணையானாய்

No comments:

Post a Comment