பறந்து போன பண்பாடு - ரமணியன்
அந்த காலம் பொற்காலம்
அந்தகனும் கூறிடுவான்.
முகநூலில், முடிந்தால்
முகத்துதி செய் ,மாறாக
உண்மை உரைக்கின் ,
உன் மெய் சிறை படும் ,
..
கேலிச்சித்திரம் வரைய ,
வேலிப்போடும் அரசியல்வாதிகள்
நகைச்சுவை சூனியங்களோ ?
மிகையான தற்குறிகளோ ??
கொலையொன்று செய்தாலே கொலையாளி எனின்
இனக்கொலை செய்தவனை என்னென்று கூற?
இனிய விருந்தாளி அவன் இந்நாட்டில் மட்டுமே !
இகழாதீர் இந்த பண்பாட்டை !
மகளுடன் நடைபயிற்சி செய்யும் தந்தை
இனிப்பொன்று உண்டு, தனியே நடைதொடர
இனி பொன் பொழுது என
ஒளிந்திருக்கும் நண்பனை
வெளி வர சீழ்கை ஒலிக்கும் குமரி.
சீரழிக்கும் சின்னத்திரை விளம்பரமன்றோ !
தொட்டால் என்ன? பட்டால் என்ன?
கெட்டால் தானே பாவம் -இது கவிமொழியாயின்
கெட்டாலும் பாதுகாப்புடன் கெட
கொட்டிடும் அறிவுரைகள் -- ஒரு திருமதி மொழியாம்.
"சேர்ந்து வாழ்தல் " இளம்தலைமுறை,
சேர்த்துக்கொண்ட புதிய வாழ்க்கை முறை.
சேர்வதும் பிரிவதும் மனம் போல்
பிக்கலில்லை , பிடுங்கலில்லை ,
இன்பமோ இன்பமாம் இடையிறா இன்பமாம். ..
பண்பாட்டை காக்க முடியாதாயினும் , கெடுக்காதிருப்போரை
வெண்பாவில் புகழ் பாடி சிலையொன்று எடுப்பேன்.
ரமணியன்
No comments:
Post a Comment