Thursday, April 4, 2013
தீராத தீவிரவாதம் - சுந்தரம்ராஜேந்திரன்
தீவிர வாதம்
சமுதாய முன்னேற்றத்தை
முடக்கும்
தீராத வாதம் !
தீவிர வாதிகள்
ஆண்டவன் படைப்பில்
சிக்குண்ட நூல் கண்டுகள்
புல்லை வெட்டப்
போர்களம் புகும்
புறநானூற்று வீரர்கள்
தன்னை அழிப்பதோடு
ஊரையும் விழுங்கும்
தீயின் நாக்குகள்!
கொள்கைப் பூப்பறிக்க
காடு மேடுகளில்
துப்பாக்கித் தோட்டம் போட்டு
அப்பாவி உயிர்களை
அறுவடை செய்பவர்கள் !
இவர்களின் கொள்கை பேதம்
இந்திய இணைந்த
மனங்களுக்குச் சேதம்
அன்பு கருணை
ஏடுகள் புரட்டி
இருண்ட பக்கங்களின்
ஊன எழுத்துக்களை
வாசிப்பவர்கள் இவர்கள்!
தீவிர வாதத்தின்
துருப்பிடித்த சிந்தனைகள்
உயிர் எலும்புகளை
உரமாகத் தின்னும்
மயான மேடுகள்
தீவிரவாதிகள்
செயல் நிழலில்
கல்லறை கட்டி
காலத்தின் நெற்றியில்
வடுக்களானவர்கள்
கொள்கை
முரண்பாடுடையவர்கள்
கீழ்த்தரமான
அறிவின் விளக்கங்கள்
தீயின் நாக்குகளால்
அரித்த தலை
சொரிய முடியுமா?
எனவேஇ இவர்களுக்கு
சலவை செய்த
மனம் மூளை வேண்டும்
தீவிரவாதம் புதைந்த மண்மேடு
மலர்கள் சிரிக்கும் பூக்காடு !
தீவிர வாதத்தின்
கால்கள் மூடமாகட்டும்!
தீவிர வாதிகளின்
கைகளில் புத்தனின்
கொள்கை ஏடுகள் புரளட்டும்!
தேசத்தின் ஒருமைப்பாடு
காக்கப் படட்டும்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment