Wednesday, April 3, 2013

நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் - தஞ்சாவூரான்



பச்சிளம் குழந்தைகள
பச்சரிசி போலிட்டு
பெத்தவள வெறகாக்கி
பொங்குது பொங்கலங்கே!

கும்பி கொதிக்குதய்யா - ஈர
கொல நடுங்குதையா
தேம்பி அழுகுதய்யா
எ சனம்
தெருவுல நிக்குதய்யா

போதி மரம் இப்ப
கழுமரமாப் போனதய்யா
போதிமரக் கெள ஒன்னு
புத்தன் தல விழுந்ததய்யா

கவிஞர்களே...கவிஞர்களே...
தமிழனுக்கு ஒன்னுன்னா
தாங்காத இதயமெங்கே
கருப்பு ரத்தம் சிந்தி
கண்கலங்கும் எழுத்தெங்கே

எழனி சீவுதல்போல்
ஏந் தமிழன் தலசீவி
மழநீர் பேஞ்சதுபோல்
தமிழச்சி
மான குழி நெரப்பி

ஆட்டம்போடும் கூட்டத்துக்கு
அறிக்கவிட்டு என்ன பயன்?

தமிழ்த்தாய் நாணுகிறாள்
தன்நிலை எண்ணி கூனுகிறாள்

என்னுயிர் தமிழர்களே வாருங்கள்
இனியாவது ஒற்றுமையாய் சேருங்கள்

No comments:

Post a Comment