Wednesday, April 3, 2013

ஈழமே நீ இடுகாடா - ரமேஷ்நாகா



வனையப்பட்ட முள்வேலிகளின் கீழ்...
சிவப்பு வடியும் அடிவானத்தில்..
முட்கம்பிகளால் வாய் கட்டப்பட்ட தீவின் பிணங்கள்..
சுவாசித்துக் கொண்டிருந்தன...வாழ்வதாய்..வாழ்வை நம்பியபடி.
கை இரந்து வேண்டிய தெய்வங்கள் கைவிட்டுவிட...
நின்று கொல்லும் கடவுளோ...அன்றும் தூங்கிப் போய்விட..
விரைந்து வந்த தென் திசையின் தெய்வம்...
விடுதலையளித்துக் கொண்டிருந்தது...அவர்களுக்கு...
எறிகணைகளாலும்...வெடியோடுகளாலும்..
வன்புணர்வுகளுக்குப் பின்...
கிரனேடுகளால் தகர்த்தெறியப்பட்ட பெண்மையின் அடையாளங்கள்
பறவைகளுக்கு உணவாய்...எஞ்சிய மரக்கிளைகளில் ஒட்டியபடி.
இனமழித்தவன்... இறுதித் தீர்ப்பை மாற்றவேண்டி...
கடவுளோடு பேரம் பேசித் திரிய..
கடல் தூர்ந்து இடுகாடாகிவிட்ட எம் தீவில்...கடவுளும் தூர்ந்துவிட
இறந்த தாயின் முலை பற்றிப் பசியிலழுத மழலையின் கண்ணீரில்..
எரிந்து சாம்பலாகி...அவிந்தடங்கியது...மூன்றாவது கண்.



No comments:

Post a Comment