Wednesday, April 3, 2013
அமிலத்தில் ஆடிய அனிச்சம் - ரமேஷ்நாகா
கடைசியாய்....
“வருகிறேன்”...என்று சொல்லி விடைபெற்ற கணங்களிலும்
மரணத்திற்கான குறிப்புகள் எதுவுமில்லை அவளிடம்.
தன் மேல் முளைக்கும் சிறகுகளால்...
வயதான எனக்குக் கூடாகும் தன் கனவுகளை அவள் பகிர்கையில்...
உயிர் நீங்கும் என் சிறகுகளுக்குத் திரும்பத் துவங்கியது உயிர்.
வாழ்தலின் கனவுகள் நீண்டு வானம் விரிந்த கணத்தில்...
அவள் மேல் விழுந்த அமிலத் துளிகள்...
முறித்துச் சென்றன ஒரு நெடுங் கனவின் பயணத்தை...
ஒரு நடுப்பகலின் அதீத மரணமாய்.
ஒரு பெரும் விபத்தாய் எனது வானம்...இரவாகிவிட...
தனித்துவிடப் பட்ட அவளின் ஏக்கங்களுடன் உதிர்கிறேன்
கையறு நிலையாய்.
ஒரு அழிவின் அதிர்வில்...என் அனிச்சம் தின்ற அமிலம்...
“காதலா?”...”காமமா?”....இல்லை...
“போலிகளும்..வெற்றுப் பொழுது போக்குகளாலும்
நிரம்பிவிட்ட இந்தச் சமூகமா?”.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment