Wednesday, April 3, 2013

ஈழமே நீ இடுகாடா - சுந்தரம்ராஜேந்திரன்



ஈழம்  தமிழர்கள்  வாழ்ந்த  பூக்காடு - இன்று
  பிணங்கள் எரிந்து முடிந்த சாக்காடு!
பழந் தமிழர்கள் குடும்பம் படும்பாடு – இன்று
  உலகத்  தமிழினமே  தலைகவிழும் வெட்கக்கேடு!

ஈழமேட்டைக்  காட்டைக்  கழனியாக்கிய தமிழினம் - இன்று
  பசிவயிற்றில் புசிக்கக் கையேந்தும் இழிந்தஇனம் !
காலங்காலமாக  வாழ்ந்து  சிறந்த   இந்தஇனம்  - இன்று       
  மிருகங்கள் பல்பட்டுக் கிழிபட்ட தெருப்பிணம் !

தமிழர்கள் பகுதிக்கு தனியீழம் கேட்டது தவறா?    அதற்கு
   அணுகுண்டு துப்பாக்கிகளால் பதில்சொல்வது முறையா?
வாழும் உரிமைக்கேட்ட மறவனுக்குச் சிறையா? – இன்று
   குழந்தைகள் கிழவர்கள் பிணக்குவியலானது கதையா?

ஈழம்  மயில்ஆடிய  குயில்கூவிய  இன்பச்சோலை - இன்று
  நாய்நரி  பேய்கழுகுகள்   திரியும் பாலை !
சிங்கள  ராணுவம்   சூடியது  பிணமாலை – கண்டு
  உலகமே கண்ணீர்;சிந்தி கொதிக்குது இவ்வேளே!

ஈழம்இன்று மனிதன்வாழ முடியாச் சிதைந்த கூடு- நிலத்தை
   நீருக்குத் தோண்டினாலும் வருவது எலும்புக்கூடு !
தனியீழம் கொடுத்தால் உனக்கென்ன கேடு ? - இன்றேல்
   எஞ்சிய தங்கத் தமிழினம் வாழ நல்வழிதேடு!

No comments:

Post a Comment