Wednesday, April 3, 2013

போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - சுந்தரம்ராஜேந்திரன்



மதுஇகால்  முளைத்த கவர்ச்சி மாது – மது இ மாது
   இவ்விரண்டும் எமனின் விசுவாசத் தூது !
மதுதரும் போதையால் வரும்கொடுந் தீது - சொன்னால்
   இன்றைய இளைஞர்களுக்கு காது கேட்காது!
     
மதுமலர் நாடிமனம் மயங்காதவர் எதிர்காலம் பூக்குழி - மது
    மெல்ல மெல்ல மனிதனை விழுங்கும் புதைகுழி !
 குடியை மறக்க திருக்குறள் படிப்பது நல்வழி - ஓருநாள்
    வாழ்ந்தாலும் தீவழி மறந்து நல்வழி நடப்பது அறவழி !

குடிப்பவன் வாழ்க்கை விடியலில்லாத இருட்டு   அதனால்
    மதுவை மனதால் கூடத் தொடாமல் விரட்டு !
போதையால் கெட்டவர் சரித்திரம் புரட்டு – நல்ல
     சமுதாயம் உருவாக அறிவுரை புகட்டு !

இளைஞர்களின் எதிர்காலம் நாட்டின் பொற்காலம் - மதுவை
     வேறோடு அழித்தால் மலரும் நற்காலம் !
போதையில் சீரழிந்த ஏழைகளின்  எதிர்காலம் - இன்பப்
     பூந்தோட்ட மலராயச்; சிரிப்பது எக்காலம்?

கள்ளுப்பானை பொங்குவதால் வீட்டில்ஏங்குது சோற்றுப்பானை- அதனால்
       அடுக்களை   உறங்குவது வாயில்லா  வறுமைப்பூனை !
மதுஇகாடுவீடு சொத்துக்களை அழிக்கும் மதயானை - அதனால்
      மதுவை   ஒழித்து    உண்போம்    இன்பத்தேனை !

No comments:

Post a Comment