Wednesday, April 3, 2013

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு - கிரிகாசன்


( மனைவியும் கணவனும்  மாறி மாறிப்  பாடுகிறார்கள்)

                உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
                     
தேய்நிலவாய் வாடிமுகம் தேசுகுறைந் தேமனமும்
தோன்றுவதேன் ஆசை அத்தானே
போயுழுது நாற்றுநட்டுப் பூமியோடு வானைநம்பிப்
பொன்விளையக் காத்தேன் அன்னமே !

தூயமகள் திருமணந் தைத் திங்கள்வர  ஆகுமென்று
தேடி நின்றாள் கலங்குகின்றாளாம்
பாயும் நதிகூடும்கடல் பார்த்துமனம் பேதலித்து
பாவை விழி யூற்றுகின்றாள் தான்

நாயை விடக் கேடுகெட்டு நல்லுழைத்துப் பாடுபட்டும்
நாளிதுவோ காலை மேற்கின் வான்
போயுமவர் ஏய்த்தவர்கள் பொன்னகைகள் மாடி இல்லம்
போகவண்டி என்று கொள்வதென்

மாயமின்றித் தெய்வமெங்கள் மனது மகிழ்வெய்தவென
மேதினியில்  செய்சுக முண்டோ
காயும்வெயில் துன்பமிடக் கஞ்சி உண்டு நாற்றுநட்டு
கண்டபயன் வேர்வை அல்லவோ

ஓயவில்லை நாள்முழுதும் ஓடிஉழைத் தென்னபயன்
உள்ள உயிர்மிச்சம் ஒன்றதே
தாயெனவே வந்தவளே தங்கமெந்தன் தேவி யதைத்
தானுமவன் விட்டுவைத்தான் பார்!

---------------
அன்புடன் கிரிகாசன்

No comments:

Post a Comment